மகிழ்ச்சி கடலில் விவசாயிகள் ! வேகமாக நிரம்பி வரும் முல்லைப் பெரியாறு அணை!!

 
மகிழ்ச்சி கடலில் விவசாயிகள் ! வேகமாக நிரம்பி வரும் முல்லைப் பெரியாறு அணை!!


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கேரளா மற்றும் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பகலில் சாரல் மழையாகவும் இரவில் கன மழையாகவும் பெய்து வருவதையடுத்து முல்லைப் பெரியாறு அணை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக 130 அடியாக இருந்த நிலையில் தற்போது இரண்டு தினங்களில் 5 அடி உயர்ந்து 135 .25 அடியாக அதிகரித்துள்ளது.

மகிழ்ச்சி கடலில் விவசாயிகள் ! வேகமாக நிரம்பி வரும் முல்லைப் பெரியாறு அணை!!


அணைக்கு நீர்வரத்து 1,315 கன அடியிலிருந்து தற்போது 4,875 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 5,929 மில்லியன் கன அடியாகவும் அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக 900 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


லோயர் கேம்பில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் தற்போது 81 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்று காலை 10.4 மீட்டர் மழையும் தேக்கடியில் 10 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து அணை நீர்மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து அணை விரைவில் 142 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் தேனி மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web