மகள் தற்கொலைக்கு காரணமாக காதலனை கொலை செய்த தந்தை மகன்!

 
கோவை
 


 

நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த மகாலிங்கம்  ன் மகன்  தமிழ்ச்செல்வன்  ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய அம்மாவிற்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யன் கொல்லகொண்டான் கிராமம் ஆகும்.
இந்த கிராமத்திற்கு தமிழ்ச்செல்வன் அடிக்கடி சென்று வந்தநிலையில்  அந்தப் பகுதியை சேர்ந்த மலைக்கனி  மகள் ஆனந்தியை  3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வன் ஆனந்தியுடன் பழகிக் கொண்டிருந்த போதே  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணையும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.  

 

ஆம்புலன்ஸ்
சினிமா   பாணியில் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் 2 பெண்களை காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக ஆனந்தியை திருமணம் செய்யாமல் காரணம் , சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனந்தி தற்கொலைக்கு தமிழ்ச்செல்வன் தான் காரணம் என்று ஆனந்தியின் அப்பா மலைக்கனி மற்றும் அண்ணன் ராஜாராம்   முடிவு செய்தனர். இதனையடுத்து தமிழ்ச்செல்வனை கொலை செய்யும் நோக்கத்துடன் நவம்பர்  24ம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் ராஜபாளையத்திலிருந்து கோவைக்கு வந்துள்ளனர்.
இன்று காலை 10 மணி அளவில் துடியலூரில் தனியார் மருத்துவமனை முன்பு வந்து நின்று கொண்டு, தமிழ்ச்செல்வனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வரவழைத்து மருத்துவமனைக்கு அருகில் உள்ள காலி இடத்தில் பேசினர்.  அந்த சமயத்தில் திடீரென இருவரும் சேர்ந்து தமிழ்ச்செல்வனை கத்தியால் கழுத்தை அறுத்தும், மார்பு மற்றும் வயிறு  பகுதிகளில் குத்தியும் கொலை செய்துவிட்டு, அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்திலேயே தப்பிச் சென்றுவிட்டனர்.  

போலீஸ்
அருகில் இருந்தவர்கள் அவர்களைப் பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.  அங்கு வந்து தமிழ்செல்வனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் உயிரிழந்த  தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்ய பயன்படுத்திய  கத்தியையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தந்தை, மகன் இருவரையும்  தேடி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web