2 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை!
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்டார் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தெள்ளூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவர் சென்னையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூங்கொடி (38), மகள் கயல்விழி (9), மகன் நிதர்ஷன் (7).
கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி பிரிந்து விட்டனர். கிருஷ்ணன், மகள் கயல்விழியுடன் சென்னை குரோம்பேட்டையிலும், பூங்கொடி மகன் நிதர்ஷனுடன் ஆகாரம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிலும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், பூங்கொடிக்கு வேறு ஒருவருடன் கூடாநட்பு ஏற்பட்டதால், மகன் நிதர்ஷனை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு, சென்னைக்கு சென்று நண்பருடன் வாழ்ந்து வந்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு கிருஷ்ணன் மகளுடன் தெள்ளூருக்குச் சென்றுள்ளார். அப்போது, மகன் நிதர்ஷனை தனியே விட்டுவிட்டு, மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டது அவருக்குத் தெரிந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த சேத்துப்பட்டு போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
