5 மாதங்களாக பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தந்தை - மகள்.. மருத்துவர் செய்த கொடூர செயல்!

 
 சாமுவேல் சங்கர்

சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலில் தந்தை மற்றும் மகளின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாமுவேல் சங்கர் (வயது 70). இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும், உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து சோதனை செய்தனர். அப்போது, ​​சாமுவேல் மற்றும் அவரது மகள் இருவரும் இறந்து கிடந்தனர். அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இச்சம்பவம் தொடர்பாக சாமுவேல் எபினேசர் என்ற மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சாமுவேல் சங்கருக்கு அவரது வீட்டில் சிகிச்சை அளிக்கும் போது  இறந்ததுள்ளார். இது தொடர்பாக அவரது மகள் மருத்துவர் சாமுவேல் எபினேசருடன் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த எபினேசர் மகளை தள்ளிவிட்டதால் அவர் இறந்துவிட்டார். இதனால் பயந்துபோன மருத்துவர் வீட்டிற்குள் பூட்டிவிட்டு வெளியேறிவிட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web