அலுவலத்தில் எல்லை மீறிய பெண் பாஸ்.. உணவு வாங்கி தர மறுத்த ஊழியரை வேலையை விட்டு நீக்கிய கொடூரம்!
சீனாவில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முதலாளிக்கு காலை உணவை வாங்க மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். லு என்ற பெண் ஒரு சீன கல்வி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவர் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து தினமும் ஒரு சூடான அமெரிக்கனோ (காபி) மற்றும் ஒரு முட்டையை தனது மேற்பார்வையாளருக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த லூ, இது தனது வேலை இல்லை என்று கூறினார். மேலும் நான் அவருடைய தனிப்பட்ட உதவியாளராக பணிபுரிய வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
சில சமயங்களில் தண்ணீர் கொண்டு வரவும் வலியுறுத்தினர். இதையடுத்து, லூ தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். 'நான் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்படவில்லை. ஆனால், தினமும் காலையில் அவளுடைய காலை உணவுத் தேவையை நான் வாங்கி வர வேண்டும் என்று என் முதலாளி எதிர்பார்க்கிறார்.
இதையடுத்து அவர் மனிதவளத் துறையிடம் இந்த பிரச்னையை தெரிவித்தார். ஆனால் நியாயம் வழங்க முடியாது என்றும், உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை அடுத்து, அந்த நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஆன்லைனில் பெரும் பின்னடைவைப் பெற்ற பிறகு, நிறுவனம் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பொது அழுத்தத்தின் கீழ் லு மீண்டும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளார். லியுவின் மேற்பார்வையாளரான லியுவை பணிநீக்கம் செய்யவும் நிறுவனம் உத்தரவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!