பெண் ரசிகை உயிரிழப்பு.. மேலும் 2 கோடி இழப்பீடு வழங்கிய புஷ்பா படக்குழு!
டிசம்பர் 5ஆம் தேதி வெளியான நடிகர் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், படத்தின் சிறப்பு காட்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனும் பாதிக்கப்பட்டு தற்போது கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே பெண்ணின் மரணம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும், திரையரங்கு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அல்லு அர்ஜுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனுக்கு தியேட்டருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பின்னும் சென்றுள்ளார். இதனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் உயிரிழந்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்ணின் மகனும் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, உயிரிழந்த பெண்ணின் மகனின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி அல்லு அர்ஜுன் ரூ.1 கோடியும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தலா ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சிறுவனின் உடல்நிலை குறித்து பேசிய அல்லு அரவிந்த், சிறுவன் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு வென்டிலேட்டர் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!