தலிபான் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு!
ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி பிடித்ததையடுத்து, காபுலில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது. ஆனால், அதன்பிறகும் இந்தியா அந்த நாடுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தலிபான் அரசின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் முத்தாகி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் 16ம் தேதி வரை இந்தியாவில் பல முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, அமீர் கான் முத்தாகி வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார். அதன் பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. ஆனால், அதில் பெண் நிருபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை தலிபான் அரசு ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் கொண்டு வந்துள்ளது. அதே மனப்பான்மையை இந்தியாவிலும் வெளிப்படுத்தும் முயற்சி என பரவலான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தை பல பத்திரிக்கையாளர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
