கடற்கரை மணலில் சிக்கிய ஃபெராரி கார்.. மாட்டு வண்டி கட்டி இழுத்து சென்ற அவலம்.. வீடியோ வைரல்!

 
ஃபெராரி கார்

கடற்கரை மணலில் சிக்கிய ஃபெராரி காரை மாட்டு வண்டி ஒன்று கயிற்றால் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரெவ்தண்டா கடற்கரையில் இத்தாலியின் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஃபெராரி மணலில் சிக்கியது. முன்னதாக, இரண்டு சுற்றுலா பயணிகள் இன்று காலை கடற்கரைக்கு காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போதுதான் கார் மணலில் சிக்கியது.


இதைத் தொடர்ந்து, காரை வெளியே இழுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது வெற்றிபெறவில்லை. இதையடுத்து, ஃபெராரி காரின் முன்பகுதியில் கயிறு கட்டி, காளை மாட்டு வண்டியை பயன்படுத்தி இழுத்தனர். இதையடுத்து ராய்காட் போலீசார் கடற்கரையில் கார் ஓட்ட தடை விதித்துள்ளனர். இந்த தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web