இன்று சென்னையில் திருவிழா... கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடக்கம்!

 
சதுரங்கம் முதலீடு செஸ்

சென்னை மக்களே மிஸ் பண்ணாதீங்க. இன்று சென்னையில் மிகப் பெரும் திருவிழா துவங்குகிறது. வாய்ப்பிருந்தா நேரில் பார்த்து மகிழுங்க என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று துவங்கவுள்ள சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 போட்டிகள் இன்று நவம்பர் 5 ம் தேதி முதல் நவம்பர் 11 ம் தேதி வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது.


மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். 'புக் மை ஷோ' இணையதளத்தில் அல்லது செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

செஸ்

ஒரு நபருக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஆர்வலர்கள் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்' என பதிவிட்டுள்ளார்.  அதனால வாய்ப்பை தவற விடாதீங்க. ரூ.100 கட்டணம் செலுத்தி நேரில் செஸ் விளையாடுவதைப் பார்த்து மகிழுங்க.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web