பார்ட்டியில் காதலியுடன் ஏற்பட்ட சண்டை.. விரக்தியில் 7வது மாடியில் இருந்து விழுந்து சட்ட மாணவர் தற்கொலை!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து சட்ட மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி படித்து வந்த தபாஸ் என்ற மாணவர். செக்டார் 99 இல் உள்ள சுப்ரீம் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஏழாவது மாடியில் வசிக்கும் ஒரு நண்பர் நடத்திய விருந்தில் கலந்து கொள்ள அவர் சென்றிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவரது காதலி என்று நம்பப்படும் ஒரு பெண் உட்பட அவரது நண்பர்கள் பலர் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். தபாஸுக்கும் அவரது காதலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் சட்ட மாணவர்கள் ஆனால் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. விருந்தின் போது, தபாஸ் ஏழாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவரே விழுந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தள்ளப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தபாஸின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!