மனைவியுடன் சண்டை... 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று கணவன் தற்கொலை!
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், மனைவியுடன் ஏற்பட்ட தொடர் தகராறு காரணமாக, ஒரு வாலிபர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முபாரக்பூர் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராம் (28). இவருக்குத் தீபன்ஷு (5 வயது) என்ற மகனும், ஹர்ஷிகா (3 வயது) என்ற மகளும் இருந்தனர். பாபுராமுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடிச் சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றும் (சனிக்கிழமை) அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மன உளைச்சலில் இருந்த பாபுராம் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்துத் தனது 5 வயது மகன் மற்றும் 3 வயது மகள் ஆகிய இருவருக்கும் விஷம் கொடுத்த பாபுராம், பின்னர் தானும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்துத் தகவல் அறிந்து அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் மூவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாபுராம் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
