ஈரோட்டில் இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

 
வேட்புமனுதாக்கல்


தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இதனையடுத்து,  ஈரோடு தொகுதியில் பிப்ரவரி 5ம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

வேட்பு மனுத் தாக்கல்

இதனையடுத்து இன்று ஜனவரி 10ம் தேதி முதல் ஜனவரி 17ம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிடவேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும்  , ஜனவரி 18ல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் எனவும்,  ஜனவரி 20ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி எனவும்  அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 5ல் வாக்குப்பதிவு, பிப்ரவரி 8ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  தொடங்குகிறது. எனவே, தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். , ஜனவரி 18ல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் அது வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,26,1433 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web