பாலியல் புகாரில் சிக்கிய திரைப்பட தயாரிப்பு நிர்வாகி மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!

 
ஷானு இஸ்மாயில்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை அளித்த புகாரின் பேரில், கொச்சியில் உள்ள ஹோட்டல் குளியலறையில் மலையாளத் திரைப்படத் தயாரிப்பு நிர்வாகி ஷானு இஸ்மாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷானு இஸ்மாயில். இவர் மலையாள சினிமா தயாரிப்பு நிர்வாகி. 2018ஆம் ஆண்டு, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர், சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, ஷானு இஸ்மாயில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக  புகார் அளித்தார்.

இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கொச்சியின் பள்ளிமுக்கு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றின் குளியலறையில் ஷானு இஸ்மாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த 11ம் தேதி நண்பர்கள் 2 பேருடன் விடுதியில் தங்கினார். 2 நாட்களுக்கு முன்பு 2 நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை.

தற்கொலை

இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஷானு இஸ்மாயில் குளியலறையில் இறந்து கிடந்தார். அறை முழுவதும் மது பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து எர்ணாகுளம் சென்ட்ரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஷானு இஸ்மாயிலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web