ஜம்மு - காஷ்மீர் சட்டசபை இறுதி கட்ட தேர்தல்... விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

 
ஜம்மு - காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்

இன்று காலை ஜம்மு காஷ்மீர் சட்டசபை இறுதி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 40 தொகுதிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த 18ம் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது. 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 25ம் தேதி 26 தொகுதிகளில் 2-வதுகட்ட தேர்தல் நடந்தது. 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தல் ஆணையம்

இந்நிலையில், 40 சட்டசபை தொகுதிகளில் இன்று 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.

From around the web