ரூ.10 லட்சம் வரை நிதியுதவி... ‘புத்தொழில் களம்’ திட்டம்... கனிமொழி எம்பி அறிவிப்பு!

ரூபாய் 10 லட்சம் வரை இளம் தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் புத்தொழில் களம் என்ற புதிய முன்னெடுப்பை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தொடங்கியுள்ளார்.
"புத்தொழில் களம்" திட்டத்தின் மூலம், இளைஞர்களின் புதிய மற்றும் நவீனமான யோசனைகளை சமர்ப்பித்து, சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கலாம். சிறந்த மூன்று திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வணக்கம்,
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 29, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்காக “புத்தொழில் களம்” என்ற தலைப்பில் ஒரு புதிய முயற்சியை துவங்கியுள்ளோம்!
இளைஞர்களின் திறமையை ஊக்குவித்து, சமூக மாற்றத்திற்காக புதிய திட்டங்களை உருவாக்கும் ஓர் முன்முயற்சி.
🔹சிறந்த மூன்று திட்டங்களுக்கு ₹10 லட்சம் வரையிலான… pic.twitter.com/tf8wnHACvB
இது தொடர்பாக தூத்துக்குடி எம்.பி., கனிமொழி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில், "துாத்துக்குடி இளைஞர்களுக்காக 'புத்தொழில் களம்' என்ற புதிய முன்னெடுப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம் துாத்துக்குடியில் உள்ள இளம் தொழில் முனைவோருக்கு வாய்ப்பை உருவாக்கி தர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இளைஞர்கள்தான் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தி. சமூகத்தில் இருக்கக் கூடிய ஏற்றத்தாழ்வுகளையும், பல்வேறு பிரசினைகளையும் தொழில் முயற்சி காரணமாக சோஷியல் ஸ்டாட் அப் வழியாக இடைவெளிகளை குறைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 18 முதல் 35 வயதிற்குட்பட்ட துாத்துக்குடியை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.
இது போட்டி அல்ல, ஒரு வாய்ப்பு. சமூகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு விஷயங்களை எப்படி மாற்ற நினைக்கிறீர்கள் என்பதற்கு ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள முடியும். தேர்வாகும் 3 திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். துறைசார்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கக் கூடிய இந்த முயற்சியில் பங்கேற்று சமூகத்தை மாற்றுங்கள்" எனக் கூறியுள்ளார். இந்த திட்டத்தில் பலன் பெற விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 16 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!