சென்னை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து... பெரும் பரபரப்பு!
சென்னை அண்ணாநகரில் உள்ள மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் தரைதளத்தில் ஏற்பட்ட தீ, குறுகிய நேரத்தில் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீ விபத்து குறித்த தகவல் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அலுவலக வளாகத்தில் புகை சூழ்ந்ததால் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தீ விபத்தில் சேதம் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தொடர்ந்து மீட்பு மற்றும் தீ அணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
