அதிகாலையில் அதிர்ச்சி... மதுரை மருத்துவமனையில் திடீர் தீ விபத்து... !
மதுரை மாவட்டத்தில் புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் 3வது மாடியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து ஏற்பட்ட உடன் அக்கம் பக்கத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்தும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்து ஏற்பட்ட அந்த மாடியில் மருத்துவமனை இயங்கவில்லை எனவும் முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே, நோயாளிகள் வேறு மாடிக்கு மாற்றப்பட்ட காரணத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
திடீரென என்ன காரணத்தால் தீ விபத்து என்பது குறித்து மருத்துவமனை தரப்பு ஆய்வு செய்து வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!