பெங்களூருவில் பயங்கர தீவிபத்து... 130 பைக்குகள், 10 ஆட்டோக்கள் மற்றும் 10 கார்கள் தீயில் கருகி நாசம்... !

 
தீவிபத்து


 
 கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகர காவல்துறை குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் ஸ்ரீராம்புரா நிலையத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காலியான நிலத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். பார்க்கிங் செய்யப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் விரைவில் பார்க்கிங் இடத்தின் மறுபக்கத்திற்கும் பரவி, சுமார் 150 வாகனங்களை எரித்தது.

தீவிபத்து

அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு காவலர் பெருமளவில் புகை வருவதைக் கண்டு காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க கிட்டத்தட்ட 2 மணி நேரம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் சுமார் 130 இரு சக்கர வாகனங்கள், 10 ஆட்டோக்கள் மற்றும் 10 கார்கள் எரிந்து நாசமானதாக காவல்துறை மதிப்பிடுகிறது.

உத்தரபிரதேச போலீஸ்

எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை தீ விபத்துக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை, ஆனால் அது வெப்பத்தாலும், பேட்டரிகள் போன்ற எரியக்கூடிய பொருட்களாலூம், இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம். தரையில் உள்ள உலர்ந்த புல் திட்டுகளால் தீ ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web