பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து... 17 மாணவர்கள் பலி; 14 பேர் படுகாயம்!
கென்யாவின் நைரி கவுண்டியில் உள்ள பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.ஹில்சைட் எண்டராஷா ஆரம்பப் பள்ளியில் நேற்று செப்டம்பர் 5ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது, விசாரணைகள் தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
Kenya, in fiamme una scuola: morti almeno 17 bambini #kieni #hillsideendarashaacademy https://t.co/si0gF0WxUz
— Tgcom24 (@MediasetTgcom24) September 6, 2024
காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரெசிலா ஒன்யாங்கோ இந்த தீ விபத்து பற்றி கூறுகையில், "நாங்கள் தீ விபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று கூறினார்.முழு விசாரணை நடைபெற்று வருவதாக ஒன்யாங்கோ பொதுமக்களுக்கு உறுதியளித்த போதிலும், தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
கென்ய உறைவிடப் பள்ளிகளில் தீ ஏற்படுவது அசாதாரணமானது அல்ல. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தும் படிப்பு நேரத்தை வழங்க இந்த நிறுவனங்களைத் தேர்வு செய்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், பள்ளி தீவிபத்துகள் மாணவர் அமைதியின்மையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டில், நைரோபியில் இதே போன்ற தீ விபத்து சம்பவத்தில் 10 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!