பாரீஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து...1,200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!
உலகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாகவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கிய நிலையில் நேற்றிரவு பாரீஸில் உள்ள ஈபிள் டவரில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 1,200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஈபிள் டவர் என்ற கோபுரம் அமைந்துள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.
அந்த சமயத்தில் ஈபிள் டவரின் முதல் தளத்துக்கும் இரண்டாம் தளத்துக்கும் இடையே, மின்தூக்கியின் கம்பி சூடானதால் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஈபிள் டவரில் கூடியிருந்த 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றி தீயை அணைத்தனர்.
தொடர்ந்து, பாதுகாப்பு கருதி ஈபிள் டவருக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டு, தடை விதிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரீஸ் சென்ற சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!