தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 6 ஊழியர்கள் படுகாயம்!
தென்மேற்கு டெல்லியில் உள்ள நஜாப்கரில் உள்ள தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 6 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தீ விபத்து தொடர்பான அழைப்பு காலை 8.16 மணிக்கு வந்தது. இதையடுத்து 17 தீயணைப்பு வாகனங்களில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலையின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது, என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!