சோகம்... துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

துருக்கியின் போலு மாகாணத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ வி பத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் உள்ள கர்தல்காயா ரிசார்ட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்ட போதும், ஹோட்டல் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து விருந்தினர்களைக் கண்டுபிடித்து மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹோட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 79 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் தீக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறினர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!