ஏமன் கடற்கரையில் கப்பலில் தீ விபத்து ... 23 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்!

 
கப்பல்

 

ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு கேமரூன் நாட்டைச் சேர்ந்த எம்.வி. பால்கான் என்ற கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் சென்றது. அங்கு கச்சா எண்ணெயை இறக்கிய பிறகு, அந்த கப்பல் ஜிபோட்டியின் கடற்படை தளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. கப்பலில் 23 இந்திய மாலுமிகள் உள்பட பலர் பணியில் இருந்தனர்.

சரக்கு கப்பல்

இந்த நிலையில், நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கப்பலில் தீப்பற்றி மளமளவென பரவியது. தீ கட்டுக்குள் வராமல் கப்பல் முழுவதும் எரிந்தது. மாலுமிகள் உயிர் பிழைக்க திகைத்த நிலையில், ஜிபோட்டி கடற்படை பாதுகாப்பு குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இந்திய மாலுமிகள் 23 பேரும் உட்பட அனைவரையும் பத்திரமாக மீட்டது.

 சரக்கு கப்பல்

மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், கப்பல் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கடல்சார் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!