அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கம்.. குவிந்த சுற்றுலா பயணிகள்!

 
வாகா எல்லை குடியரசு

இன்று குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் மூவர்ணக்கொடியை இறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை காண இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா எல்லையில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டாரி பகுதி அமைந்துள்ளது.  இதேபோல் பாகிஸ்தானின் லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டாரி - வாகா பகுதிகள் இருநாடுகளுக்கான எல்லையாக செயல்பட்டு வருகிறது.  

வாகா எல்லை குடியரசு

இந்த எல்லைப் பகுதியில் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாளில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.  அந்த வகையில் இன்று, குடியரசு நாளையொட்டி நடைபெற்ற கொடியிறக்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அட்டாரி - வாகா எல்லையில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

வாகா எல்லை குடியரசு

எல்லையில் இந்திய ராணுவப் படையினரும், பாகிஸ்தான் படை வீரர்களும் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி தேசியக் கொடி இறக்கப்பட்டது. இதில் வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாஅடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web