ஏப்ரல் 28 க்குள் தமிழகம் முழுவதும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்... உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு !

தமிழகத்தில் ஏப்ரல் 28ம் தேதி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை விளாங்குடி, மாடக்குளம் பகுதியில் அதிமுக கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரி அதிமுக நிர்வாகிகள் சித்தன், கதிரவன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி இளந்திரையன் தள்ளுபடி செய்து, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் நிரந்தரக் கொடிக்கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். தனியார் நிலங்களில் கொடிக்கம்பம் அமைப்பது குறித்த வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி பதிவிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, தமிழகம் முழுவதும் ஏப்ரல் 28ம் தேதிக்கு முன் அனைத்து பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு இருப்பதை தமிழக தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!