கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. அரசு ஒப்பந்ததாரர் குத்திக்கொலை... போட்டுக் கொடுத்த தோழி!!

 
கொலை

சென்னையில் தோழியுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காரில் அமர்ந்திருந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்த விசாரணையில் இறங்கிய போலீசார், தோழி ஸ்கெட்ச் போட்டு கொடுத்து, கொடூர கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. 

புதுச்சேரியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38), அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்த பிரகாஷ், சென்னை அசோக் நகர் 4வது பிரதான சாலையில், தனது சொகுசு காரில் பெண் நண்பருடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர் காரை மறித்து நின்று, பிரகாஷை காரிலிருந்து கீழே இழுத்துப் போட்டு, அவரது மார்பில் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

பள்ளி மானவி தற்கொலை

இது குறித்து தகவலறிந்த அசோக் நகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 பெண்கள் உட்பட 3 பேர் இந்த சம்பவத்தில் தொடர்புடையது தெரிய வந்தது. பின்னர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை ஊழியர் தனஞ்செழியன் (42), அவரது மனைவி சுகன்யா (37), மற்றும் சுகன்யாவின் தோழி குணசுந்தரி (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் விசாரணையில், பிரகாஷும் சுகன்யாவும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பால் சுகன்யா தனஞ்செழியனைத் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் நெருக்கமாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த தனஞ்செழியன் பலமுறை தனது மனைவி சுகன்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சுகன்யா கணவரை விட்டு பிரிந்து புதுச்சேரியில் வசித்து வந்த போதும், பிரகாஷுடன் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இந்நிலையில் டெண்டர் தொடர்பாக பிரகாஷ் சென்னைக்கு வந்தபோது, புதுச்சேரியில் இருந்து சுகன்யாவையும் காரில் அழைத்து வந்திருந்தார். இருவரும் சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்த தகவலை சுகன்யாவின் தோழி குணசுந்தரி, தனஞ்செழியனுக்கு தெரிவித்ததால் அவர் ஆத்திரமடைந்து, நண்பர்கள் மூவருடன் சென்று, சுகன்யாவுடன் காரில் அமர்ந்திருந்த பிரகாஷை நடுரோட்டில் இழுத்துப் போட்டு குத்திக்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனஞ்செழியனுடன் வந்த மற்ற மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?