சென்னையில் கப்பல் மேல் மிதவை உணவகம்... சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தப்படி சாப்பிடலாம்... முழு விபரம்!

 
கப்பல் உணவகம்

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு படகு குழாமை காணவும், படகு சவாரி செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இங்கு  ஏற்கனவே வாட்டர் கூட்டர், ஸ்பிட் போட், கை படகு   சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகளை  கவரும் விதமாக  தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் ரூ 5 கோடி மதிப்பில், 125 அடி நீளம், 25 அடி அகலத்தில், முதல் அடுக்கு முழுவதும் குளிருட்ட்டப்பட்ட இரண்டு அடுக்கு மிதவை உணவக கப்பல் கொச்சியைச் சேர்ந்த 'கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் சார்பில், தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

கப்பல் உணவகம்

கடந்த ஓராண்டாக  கட்டுமானப்பணிகள் இந்த படகு குழாம் வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில்  தற்போது அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா  நடைபெற்றுள்ளது.  இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைக்கப்பட்டிருக்கும் மிதவை உணவக கப்பலை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலஷ்மி மதுசூதனன், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன்  உட்பட பல நிர்வாகிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அமர்ந்து படகில் பயணம் செய்தனர்.  

கப்பல் உணவகம்

மேல் தளத்தில்  அமைச்சர்கள் நிர்வாகிகள் சென்று பலூன்களை பறக்கவிட்ட நிலையில் மிதக்கும் உணவு கப்பலில் மிதமான வேகத்தில் நகர்த்தச் சொல்லி பறவைகள், மற்ற படகுகள் இயக்கம், சன் செட்  காட்சிகளை கண்டு ரசித்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web