இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிரிழப்பு 44 பேர்!

 
இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிரிழப்பு 44 பேர்!


உலகம் முழுவதும் இன்னும் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில் இயற்கைச் சீற்றங்களும் அவ்வப்போது மக்களை அவதியடைய வைக்கின்றன.அந்த வகையில் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் 2 நாட்களாக விடாது பெய்த தொடர் கனமழையால் அங்குள்ள பல கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் இருந்து சேறும் சகதியுமாக வெள்ள நீர் வெளியேறி ஊர்களுக்குள் புகுந்தது.

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிரிழப்பு 44 பேர்!

மேலும் இதன் காரணமாக லாமெனெலே என்ற மலை கிராமத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 50 வீடுகள் மீது மண் சரிந்து விழுந்தது‌. அந்த வீடுகளில் வசித்தவர்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.உடனடியாக அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. காவல்துறையும், ராணுவ வீரர்களும் அங்கு வசித்து வரும் உள்ளூர் மக்களும் சேர்ந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை மீட்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் 38 பேர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிரிழப்பு 44 பேர்!

நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் பலரை உலுக்கியுள்ளது. மழை வெள்ளம் காரணமாக அங்குள்ள பல கிராமங்களில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

dinamaalai.com

From around the web