நாளை முதல் மலர் கண்காட்சி ... சென்னை மக்களே சுற்றிப் பார்க்க தயாரா?

 
செம்மொழி பூங்கா

தமிழகத்தில் சென்னையில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் செம்மொழி பூங்காவை 2010ம் ஆண்டு கருணாநிதி திறந்து வைத்தார். இந்த பூங்காவில் 800 வகையான செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சி போன்று, செம்மொழி பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.

செம்மொழி பூங்கா

ஜனவரி 2ம் தேதி தொடங்கும் இந்த மலர் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்களுடன் பல விதமான மலர்கள் காட்சிக்கு வைக்கப்படும். இதை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்ற போது மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு காரணமாகவே, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை இந்த ஆண்டும் மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

செம்மொழி பூங்கா

ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web