ஈஸியா பணக்காரராக இந்த பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க!
பணக்காரராக வேண்டும் என்பது அனைவரின் ஆசைதான். ஆனால் அது ஒரே நாளில் நடக்கும் விஷயமல்ல. அதற்காக கடின உழைப்பும், திட்டமிட்ட சேமிப்பும், நீண்டகால முயற்சியும் அவசியம். சிலர் அதிர்ஷ்டத்தால் வேகமாக செல்வந்தராகலாம், ஆனால் பெரும்பாலோர் தங்கள் பழக்கவழக்கங்கள் மூலமே முன்னேறுகிறார்கள்.

சேமிப்பு பழக்கம் மிக முக்கியமானது. சம்பளம் கிடைக்கும் போதே ஒரு தொகையைச் சேமிப்புக்காக ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், தொடர்ந்து கடைப்பிடித்தால் அது பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அதேபோல், பணம் மற்றும் வணிகம் குறித்த தகவல்களை தினமும் படிக்கும் பழக்கம் பொருளாதார அறிவை வளர்க்கும். இது மனநிலையையும் சிந்தனை திறனையும் கூர்மைப்படுத்தி முன்னேற உதவும்.

செலவுக் கட்டுப்பாடு மற்றும் முதலீடு ஆகியவை செல்வந்தராவதற்கான மற்ற முக்கிய அம்சங்கள். வரவுக்கேற்ற செலவுடன் மாதாந்திர பட்ஜெட்டை அமைத்து கண்காணிக்க வேண்டும். சேமிப்பை மட்டும் நம்பாமல், பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், பி.எஃப் போன்ற வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். இதனுடன் பொறுமை அவசியம் — நிதி அறிவை பிறரிடமிருந்து கற்றுக்கொண்டு, புத்திசாலித்தனமாக பணத்தை பெருக்கினால், பணக்காரராகவில்லை என்றாலும் வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
