உணவு டெலிவரி ஊழியர் கொலை ...தம்பதி கைது!
பெங்களூரில் உணவு விநியோகம் செய்து வந்த ஊழியர் ஒருவரை கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் உணவு டெலிவரி ஊழியரை கார் ஏற்றி கொல்லும் காட்சியும், பின்னர் அதே வழியில் திரும்பி வந்து காரின் உடைந்த பாகங்களை எடுத்துச் செல்லும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் கேரளத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (32) மற்றும் அவரது மனைவி ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆரத்தி ஷர்மா (30) எனப் போலீசார் தெரிவித்தனர். மனோஜ் கலைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இருவரும் 24 வயதான தர்ஷனை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். சாலைப் பிரச்சனையில் ஏற்பட்ட வாக்குவாதமே கொலையாக மாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அன்றைய இரவு 9 மணியளவில் தர்ஷனின் இருசக்கர வாகனம் மனோஜின் காரை உரசியதால் கார் கண்ணாடி சேதமடைந்தது. தர்ஷன் மன்னிப்புக் கேட்டுவிட்டு சென்றிருந்தாலும், ஆத்திரம் அடைந்த மனோஜ் வேகமாக பின்தொடர்ந்து தர்ஷனை கார் ஏற்றி வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இதில் தர்ஷன் உயிரிழந்தார்; பின்னால் அமர்ந்திருந்தவர் காயமடைந்தார். முதலில் விபத்தாக கருதிய போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தம்பதியினர் மீண்டும் சம்பவ இடத்துக்குத் திரும்பி வந்து காரின் உடைந்த பாகங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு இருவரும் கைது செய்யப்பட்டு, முதற்கட்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
