உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி... சுனாமியில் பெற்றோரை இழந்த வளர்ப்பு மகள் திருமணம் !

 
ராதாகிருஷ்ணன்


 
தமிழகதில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் உடமைகளை இழந்தனர். குறிப்பாக  நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏராளமான உயிர்கள் பறிபோயின. அதில் கீச்சாங்குப்பம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரையோரம் பெற்றோரை இழந்த 2 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அப்போதைய நாகை ஆட்சியரும், உணவுத் துறை செயலருமான ஜெ.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், 2 குழந்தைகளும் நாகையில் உள்ள அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தனர்.

ராதாகிருஷ்ணன்


வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா என்றும், கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு மீனா என்றும் ராதாகிருஷ்ணனே பெயர் சூட்டினார்.  இவர்களுடன் சேர்த்து காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 150 குழந்தைகள் மீதும் ராதாகிருஷ்ணன் தனிக்கவனம் செலுத்தி, பணிக்கு மத்தியில் தினமும்  அங்கு சென்று சில மணி நேரங்களை செலவழித்தார். குழந்தைகள் அனைவரும் ராதாகிருஷ்ணனை அப்பா என்றும் அவரது மனைவியை அம்மா என்றும் அழைத்து வந்தனர். இதன் பிறகு ராதாகிருஷ்ணன் பதவி உயர்வில்  பல இடங்களுக்குச் சென்றாலும், நாகை வரும்போதெல்லாம் காப்பகத்துக்குச் சென்று குழந்தைகளை பார்த்து அன்போடு நலம் விசாரித்து வந்தார்.  

ராஜீவ் ரஞ்சன், ராதாகிருஷ்ணன் மு.க.ஸ்டாலினுடன் அவசர ஆலோசனை!


குழந்தைகள் வளர்ந்து பலரும் திருமணமாகி சென்றனர். சவுமியா, மீனா ஆகியோர் 18 வயதை எட்டியதால், காப்பகத்தில் தங்குவதில் நடைமுறை சிக்கல் இருந்து வந்தது. இதையடுத்து, ராதாகிருஷ்ணன் அனுமதியுடன் நாகப்பட்டினம் கடற்கரைச் சாலையில் உள்ள மலர்விழி- மணிவண்ணன் தம்பதியினர் 2 பேரையும் தத்தெடுத்துக் கொண்டனர். பிஏ பட்டதாரியான சவுமியாவுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்த நிலையில், மீனாவுக்கு நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. தற்போது  உணவுத் துறை செயலாளராக இருந்து வரும்  ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகள் இத்திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர், நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web