மழைக்காலங்களில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் !

 
மழை
 

மழைக்காலங்களில் உடல் நோய்களுக்கு அதிகம் பாதிப்படைவதால், உணவு முறையில் சிறு முன்னெச்சரிக்கை முக்கியம். விருப்பப்படி உணவு சாப்பிடுவது சில சமயங்களில் உடலுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும்.முதலில், நிலவேம்பு தூள் பயன்பாடு: வைரஸ் மற்றும் காய்ச்சல்களை தடுப்பதற்கு நிலவேம்பு பொடியை வெந்நீரில் சிறிது பனங்கற்கண்டுடன் கொதிக்க வைத்து குடிப்பது நல்லது. இது காய்ச்சல்களை வருவதற்கு முன் தடுக்கும்.

மழை

கீரைகள் குறைத்து சாப்பிட வேண்டும்: மழைக்காலத்தில் கீரை அதிகமாக சாப்பிடுவது அனைவருக்கும் ஏற்றமல்ல; சிலருக்கு இது அஜீரண பிரச்சனை ஏற்படுத்தும். ஆகையால் உணவில் கீரை வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

சற்று சூடாக உணவு சாப்பிடவும்: எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, உப்புமா, இட்லி, தோசை, பிரெட் போன்றவை சாப்பிடுவது பாதுகாப்பானது.

நீர்சத்து நிறைந்த காய்கறிகளை தவிர்க்கவும்: மழைக்காலத்தில் சுரைக்காய், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை அதிகமாக சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.இந்த முறைகள் நமது உடல் சக்தியையும் நோய் எதிர்ப்பு திறனையும் பாதுகாக்க உதவும்.

 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?