வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்!
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (80), உடல்நலக் குறைவு காரணமாகத் தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக நாளை (டிசம்பர் 10) ஏர்-ஆம்புலன்ஸ் (விமான ஆம்புலன்ஸ்) மூலம் இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்.

கலிதா ஜியாவை அழைத்துச் செல்லவிருக்கும் ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்குத் தரையிறங்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றிரவு 9 மணிக்கு விமானம் புறப்படும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஏர்-ஆம்புலன்ஸ் ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட எப்.ஏ.ஐ விமானக் குழுமத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
