முன்னாள் கேப்டன் அசாருதீன் அமைச்சராக பதவியேற்பு!
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில தலைநகர் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் செயல் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மொஹம்மது அசாருதீன் (62), சமீபத்தில் மாநில மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, இன்று (அக்.31) அவர் தெலுங்கானா அமைச்சரவையில் இணைந்தார்.
ஆனால், தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் அசாருதீனை அமைச்சராக நியமித்தது விதிமீறல் என பா.ஜ.க. கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசாருதீன் தோல்வியடைந்திருந்தார். பின்னர் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பாரம்பரியமாக சிறுபான்மையினருக்கான அந்தப் பதவி இம்முறை அசாருதீனுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
