முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறையில் அடைப்பு!
2007 முதல் 2012 வரை பிரான்சின் அதிபராக பதவி வகித்த நிகோலஸ் சர்கோஸி, லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியிடம் தேர்தல் நிதி உதவி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு கடந்த இரண்டு மாதங்களாக பாரிஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், சர்கோஸி குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதித்தது. இதையடுத்து, இன்று அவர் பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சர்கோஸி தனி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அதே சமயம், தனது தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
