சூப்பர்... ஆகஸ்ட் 31ம் தேதி சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்….!

தமிழகத்தில் சென்னையில் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023 டிசம்பரில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம், மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்படி 2023 டிசம்பர் 9, 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்ட பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் மீண்டும் போட்டியை நடத்திக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதால் சென்னை அண்ணா சாலையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ40 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது.அந்த வகையில் இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தில் 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கப்பட கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவுப் போட்டியாக சாலை வழியாக நடத்தப்படு கார் பந்தயம் இது என்பதால் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியை நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்தது.
போட்டிக்கான கட்டணமாக, “ப்ரீமியம் ஸ்டாண்ட் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் ரூ3,999 ஆகவும், இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ6,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிரான்ட் ஸ்டாண்ட் 1,2,3,4,5 டிக்கெட் கட்டணம் ரூ 1,999 , கிரான்ட் ஸ்டாண்ட் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ 2,499 , கோல்டு லவுஞ்ச் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் ரூ7,999, வார இறுதி நாட்களில் கோல்டு லவுஞ்ச் டிக்கெட்டின் விலை ரூ13,999 ஆகவும் பிளாட்டினம் லவுஞ்ச் கட்டணம் 12,999 ஆகவும் வார இறுதி நாட்களில் ரூ19,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா