ரயில் மோதி 4 பேர் பலியான சம்பவம்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!
கேரளாவில் ரயில் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் நவம்பர் 2ம் தேதி பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், அவரது மனைவி வள்ளி, காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராஜம்மாள் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!