ஒரே மாதத்தில் நடந்த 4வது தற்கொலை.. கோட்டாவில் தொடரும் அவலம்!

ராஜஸ்தானின் கோட்டாவில், JEE நுழைவுத் தேர்வு மற்றும் NEET நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் சேரவும், தேர்வுகளுக்குத் தயாராகவும் இங்கு வருகிறார்கள். இந்நிலையில், சமீப காலமாக கோட்டாவில் பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோட்டாவில் தங்கி JEE தேர்வுக்குத் தயாராகி வந்த 17 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மனன் சர்மா என்ற மாணவர் கடந்த 3 ஆண்டுகளாக கோட்டாவில் தங்கி, அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து JEE தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
இந்நிலையில், JEE தேர்வுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மனன் சர்மா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மாணவர் மனன் சர்மா தனது கண்களை தானம் செய்யப் போவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் கோட்டாவில் நடந்த 4வது தற்கொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!