பிரபல கோயிலில் நூதன மோசடி.. பணம் கொடுத்தால் நேரடி தரிசனம் என கூறிய இருவர் அதிரடியாக கைது!
தமிழ்நாட்டில் உள்ள சக்தி ஸ்தலங்களில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரபலமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஏராளமானோர் மாரியம்மன் கோயிலில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலை சீசன் மற்றும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதை சாதகமாக பயன்படுத்தி, ஒரு சில இடைத்தரகர்கள், கோவிலில் பணிபுரியும் நிர்வாகிகளை பயன்படுத்தி, பக்தர்களை ஏமாற்றி, பக்தர்களிடம் பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக, ஒருவரிடம் 200 ரூபாய் கொடுத்தால் நேரடியாக தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக பேரம் பேசுகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, வீடியோ வெளியாகி வெளிச்சத்துக்கு வந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இருநூறு ரூபாய் கொடுத்தால் நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாக கூறுகின்றார். இந்த மோசடியில் கோயிலில் உள்ள அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள், பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது பக்தர்களிடம் இடைத்தரகர்கள் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இடைத்தரகர்களாக செயல்பட்ட தங்கப்பழம் (55), யாசிகா (21) ஆகிய இருவரையும் சமயபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இடைத்தரகர்களாக செயல்படுபவர்கள் மீது காவல்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் கடும் நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!