வறுமையில் வாடுபவர்களை குறிவைத்து மோசடி.. கடனுக்காக கிட்னியை விற்ற பெண்.. அதிர்ச்சி பின்னணி!

 
பாட்டி - பெண்கள்

பெங்களூரு, ராம்நகர் மாவட்டத்தில் உள்ள மகடியைச் சேர்ந்த 46 வயது பெண் கீதா, பெங்களூருவில் வசிக்கிறார். கீதாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார். கிட்டத்தட்ட 8 மாதங்கள் கடன் தவணைகளை செலுத்திய பிறகு, உடல்நலக்குறைவு காரணமாக 2013 இல் அவர் இறந்தார்.

கடன்

கணவரின் மரணத்திற்குப் பிறகு, கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும், தனது இரண்டு மகள்களை வளர்ப்பதிலும் அவர் நிறைய சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான், நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவி கோரி கீதா மஞ்சுநாத் என்கிற மஞ்சன்னாவை அணுகினார். அப்போதுதான் பிரச்சினை அதிகரித்தது.

காவல் நிலையத்தில் கீதா அளித்த புகாரில், "என் கணவர் இறந்த பிறகு, நான் நிறைய நிதி நெருக்கடியைச் சந்தித்தேன். என் மகள்களைப் படிக்க வைக்கவும், அவர்களின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முடியவில்லை. இந்த நேரத்தில்தான் மஞ்சுநாத் தனது சிறுநீரகத்தை விற்று பணம் சம்பாதிக்கும் யோசனையை முன்வைத்தார். ஒரு சிறுநீரகத்தை விற்றால், மற்றொரு சிறுநீரகத்துடன் நான் உயிர்வாழ முடியும் என்று அவர் உறுதியளித்தார்.

எனவே, இந்த கடினமான சூழ்நிலையில், வேறு வழியில்லாமல், நான் தயக்கத்துடன் அந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டேன். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கு, என் சிறுநீரகம் அகற்றப்பட்டது. சிறுநீரகத்திற்காக எனக்கு ரூ. 2.5 லட்சமும் கொடுக்கப்படும் என்றார். ஆனால் மஞ்சுநாத் எனக்கு ரூ. 1.5 லட்சத்தை மட்டுமே கொடுத்தார். அந்தப் பணத்தைக் கொண்டு எனது கடனை அடைத்தேன்.

என் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், இல்லை. சில வாரங்களுக்குப் பிறகு, மஞ்சுநாத் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு என்னைத் துன்புறுத்தினார்.  என்னிடம் சண்டை போட தொடங்கினார். நான் பணத்தைக் கொடுக்க முடியாவிட்டால், என் இரண்டு மகள்களின் சிறுநீரகங்களை விற்கும்படி என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன் " என்று அவர் கூறினார்.

சிறுநீரகம்

இந்த சூழ்நிலையில், மாகடி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல்,  சிறுநீரகத்தை விற்குமாறு  மிரட்டியதாக மஞ்சுநாத் மீது 52 வயதுடைய மற்றொரு பெண் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் ராம்நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web