செம... மேட்ச் பார்க்க போறவங்களுக்கு இலவச பேருந்து... ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி ஜனவரி 22ம் தேதி கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
Plan your travel smartly! Get set for the India vs England, 2nd T20I at Chepauk on January 25. 🇮🇳 🏴#TNCricket #TNCA #INDvENG #ChepaukStadium #TamilNaduCricket pic.twitter.com/7BKPjTCNsM
— TNCA (@TNCACricket) January 23, 2025
இதை தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, ரசிகர்களின் வசதிக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டியை காண வரும் ரசிகர்கள் அரசு பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக ) இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இத்தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அதன்படி, போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் போட்டி நடப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின் 3 மணி நேரத்திற்குள்ளும் கட்டணமின்றி பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை முன்னிட்டு இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் – சேப்பாக்கம் மைதானம் வரை மாலை 4 மணி முதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!