டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி... எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம்!

 
டிஎன்பிஎஸ்சி
தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ள நிலையில், இந்த இலவச பயிற்சிகளில் சேர்வதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். குரூப் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) முன்னெடுப்பாக முன்னனி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group-II & IIA முதல் நிலை தேர்வில் (Preliminary exam) தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு (Main) தேர்ச்சி பெற விரும்பும் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

டிஎன்பிஎசி   தேர்வு  தேதியில்  திடீர்  மாற்றம்

இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில்  தேர்ச்சி பெற்றவர்களும்  21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்,  விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான  செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web