குட் நியூஸ்... கேன்சருக்கு இலவச தடுப்பூசி... 2025 முதல் சந்தைகளில் !
கேன்சர் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த தடுப்பூசிகள் 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கலாம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.எம்ஆர்என்ஏ அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்திருக்கும் நிலையில் இந்தத் தகவலை ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரி கப்ரின் உறுதிப்படுத்தி உள்ளார்.
ரஷ்ய செய்தி நிறுவனம் TASS இது குறித்து இந்த தடுப்பூசி ரஷ்யாவின் பல்வேறு ஆய்வு மையங்கள் சேர்ந்து செய்த கூட்டு முயற்சி ஆகும். 2025ன் ஆரம்பத்தில் இந்த தடுப்பூசி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம், தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கிண்ட்ஸ்பர்க் ’’தடுப்பூசியின் முன் மருத்துவ பரிசோதனைகள் கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது’’ எனத் தெரிவித்து இருந்தார்.
ஒவ்வொரு கேன்சர் நோயாளிக்கும் ஒவ்வொரு மாதிரியான பாதிப்பு, மருந்து தேவைகள் இருக்கலாம். அந்த வகையில் கேன்சர் தடுப்பூசி தனிப்பயன் கொண்ட வகையில் உருவாக்கப்படும். இதற்கு அதிக நேரம் ஆகும் என்பதால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படலாம். இதன்மூலம், தனித்த புற்றுநோய் தடுப்பூசி சாத்தியமாக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.neural network computing என்ற தொழில்நுட்பம் மூலம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள், கேன்சர் தடுப்பூசி உருவாக்கப்படும் என ரஷ்ய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!