டிசம்பர் 15 முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை!
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களின் கோரிக்கைகள் தற்போது பரிசீலனையில் உள்ளன. தகுதி பெற்றவர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் நிதி வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த திட்டம் 2023 செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளில் தொடங்கியதிலிருந்து, தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைமுறையில் உள்ளது. மாதந்தோறும் 1.14 லட்சம் பெண்கள் நிதி பெறுகின்றனர். இதுவரை அரசு ரூ.30,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கான முக்கியமான திட்டமாக இது திகழ்கிறது.

மேலும் பல பெண்கள் பயனடைய சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக நான்கு சக்கர வாகனம் கொண்ட குடும்பங்களும் இப்போது விண்ணப்பிக்க முடியும். சமீபத்திய ஸ்டாலின் முகாம்களில் 28 லட்சம் பெண்கள் புதியதாக விண்ணப்பித்துள்ளனர். அவை நவம்பர் 30க்குள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15 முதல் தொகை வழங்கப்படும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
