தாமரை தண்டு சிப்ஸ் முதல் மக்னா மசாலா வரை.. நடிகர் சின்னி ஜெயந்த் மகன் திருமண மெனுக்கள் வைரல்!
தமிழ் திரையுலகில் நடிகர் சின்னி ஜெயந்த் 1980 களில் நகைச்சுவையில் கலக்கி வந்தவர். ரஜினியுடன் நடிக்கும் போது ஆன்ஆன்ஆன்.... என சவுண்ட் கொடுத்து பிரபலமானவர். குணச்சித்திர நடிகரான இவர் கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் நடித்துள்ளார். அஷ்டலட்சுமி கிரியேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் கடந்த 2019ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் பங்கேற்று அதில் 75வது ரேங்க் பெற்றார். முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக பணியாற்றினார்.
அதன் பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் வேலை ஒதுக்கப்பட்டது. முதலில் தூத்துக்குடி பயிற்சி துணை ஆணையராகவும், பின்னர் திருப்பூர் மாவட்ட துணை கலெக்டராகவும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முதன்மை அலுவலகத்தில் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டார். இவருக்கும் ஐஏஎஸ் அதிகாரி மானஸ்வி என்பவருக்கும் கடந்த 25ம் தேதி திருமணம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், முன்னாள் ஆளுநர் தமிழிசை, அமைச்சர்கள் ஏ.வி.வேலு, செஞ்சி மஸ்தான், ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் திருமணத்தை நேரில் பார்வையிட்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.
இந்நிலையில், சின்னி ஜெயந்த் மகன் திருமணத்திற்கு கேட்டரிங் சர்வீஸ் செய்ய மாதம்பட்டி ஐஸ்வர்யா வந்தார். இவர் மாதம்பட்டி நாகராஜின் திருமண உணவு சுவைகளின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். மாதம்பட்டி ரங்கராஜின் சித்தப்பா மகள் தான் ஐஸ்வர்யா. சின்னி ஜெயந்தின் மகன் திருமணத்திற்கு செய்த பொருட்களை ஐஸ்வர்யா டிவி சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் பால் பாயாசம், சோயா கோலா உருண்டை, தாமரை தண்டு சிப்ஸ், தந்தூரி மலாய், ஜவ்வரிசி இட்லி, பலாப்பழம் அல்வா, பீட்ரூட் பூரி, ஒயிட் சாக்லேட் பாதாம் பிஸ்கட், சாக்லேட் டிப்ட் டேட்ஸ், காஜன் பன்னீர் பாப்கார்ன் மற்றும் மக்னா மசாலா போன்ற கலக்கல் மெனுக்கள் இருந்தன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!