ராமேஸ்வரம் கோவில் தரிசனம் முதல் பாம்பன் பாலம் திறப்பு வரை... பிரதமர் மோடியின் பயணத்திட்டம் !

 
பாம்பன் பாலம்

 

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டு போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. பழைய பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு வந்ததால் 2020ம் ஆண்டு முதல் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. கடல் காற்று மற்றும் சவாலான வானிலைக்கு மத்தியில் பாம்பன் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 

 பாம்பன் பாலம்

பாலத்தின் உறுதி குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டபின் புதிய பாம்பன் பாலத்தில் ரயில்களை இயக்கி சோதனை நடத்தப்பட்டன. பாம்பன் புதிய பாலத்தில் 72.5 மீட்டர் நீளமுள்ள மையப் பகுதி உள்ளது. இதன் மூலம் கப்பல்கள் செல்வதற்காக 17 மீட்டர் உயரத்திற்கு பாலத்தை உயர்த்த முடியும்.புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி நாளை ஏப்ரல் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேரில் திறந்து வைக்க உள்ளார்.

 

இந்நிலையில், பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் பயண திட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இலங்கையில் உள்ள பிரதமர் மோடி அங்கு இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ராமேஸ்வரம் மண்டபத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்திற்கு நாளை காலை 11.45 மணிக்கு வந்திறங்க உள்ளார். 

இதனை தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக பாம்பன் சாலை பாலத்தின் நடுவே உள்ள மேடைக்கு சென்றடையும் பிரதமர் மோடி பிற்பகல் 12 மணிக்கு அளவில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். விழா முடிந்து பிற்பகல் 12.40 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி 1.15 மணி வரை சுவாமி தரிசனம் செய்கிறார். 

பாம்பன் பாலம்

இதன்பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு 1.30 மணிக்கு செல்லும் பிரதமர், 2.30 மணி வரை பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மக்கள் மத்தியில் உரையாற்றுகிறர். இதனையடுத்து சாலை மார்க்கமாக மீண்டும் மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு செல்லும் மோடி ராணுவ ஹெலிகாப்டரில் 3.00 மணிக்கு மதுரை செல்கிறார். தொடர்ந்து பிற்பகல் 3.50 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் டெல்லி செல்ல இருக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web