காதலுக்கு ஓகே சொல்லாததால் விரக்தி.. ஒரே அறையில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை!

 
உபன்யா - சுகின்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வெங்கனூரில் வசித்து வந்தவர் உபன்யா (18). உபன்யாவும் சுகினும் (23) கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மன உளைச்சலில் இருந்த காதலர்கள் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு இரவு 11 மணியளவில் உபன்யா வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டில் யாரும் இல்லை.

காதல்

இந்நிலையில் காதலர்கள் வீட்டில் உள்ள அறையில்  சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, கோவில் திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்த உபன்யாவின் அண்ணன், சகோதரனும், காதலனும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் உறவுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web