காதலியை பிரிந்து சென்றதால் விரக்தி.. 200 கிலோ மீட்டர் தேடி பயணித்த புலி!

 
போரிஸ்

காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. அப்படி ஒரு சம்பவத்தில், ரஷ்யாவை சேர்ந்த புலி ஒன்று தனது துணையை தேடி 200 கிலோமீட்டர் பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சிரோடா மலைப்பகுதியில் 2 புலிக்குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர். ஆண் புலிக்கு போரிஸ் என்றும், பெண் புலிக்கு ஸ்வெட்லயா என்றும் பெயரிட்டு வளர்க்கப்பட்டது.


இரண்டு புலிகளும் தனித்தனியாக வாழ்வதற்காகப் பிரிக்கப்பட்டு, போரிஸ் 200 கிலோமீட்டர் தொலைவில் சத்ரியா காட்டில் விடப்பட்டது. ஆனால் புலி தன் இருப்பிடத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருந்தது. அதே சமயம், தன் துணையை பிரிந்த ஸ்வெட்லயா, வேறு எங்கும் பயணிக்காமல், தான் சென்ற இடத்திலேயே சுற்றித் திரிந்தது.

காதல்

இந்த புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், போரிஸ் புலி 3 ஆண்டுகள் பயணம் செய்து ஸ்வெட்லயா இருக்கும் காட்டிற்கு வந்தது. இரண்டு புலிகளும் கடந்த 6 மாதங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web