இன்று இறுதிசடங்குகள் | வெளிநாட்டில் இருந்து சென்னை வந்தடைந்த எஸ்றா சற்குணம் மகள்கள்!
முன்னதாக இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அதன் பின்னர் கடந்த வாரத்தில் அவரது உடல்நிலை மோசமானதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 21ம் தேதி மாலை 5.30 மணி அளவில் எஸ்றா சற்குணம் காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் வந்தனர்.
அவரது மகள்கள் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்திருக்கும் நிலையில், இன்று செப்டம்பர் 26-ம் தேதி இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!